
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் அரசின் முடிவுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக மெட்ரோ ரயில் மற்றும் விரைவுச்சாலை வசதிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது கைவிடப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
புதிய விமான நிலையம் அமைக்க மீண்டும் முயற்சி எடுத்தால் 15 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.