
நடிகை ராஷ்மிகா மந்தனா 'மைசா' படப்பிடிப்பின் போது வலது இடுப்பு பகுதியில் தசைநார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலையில், ஓய்வு நேரத்தில் புதிர் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதாக அவர் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.