
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
மாஸ்டர், கைதி போன்ற படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.