
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் வரும் 15-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது.
சலிமா டெட் தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் நியூஸிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் 'டி' பிரிவில் களமிறங்குகிறது.
16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், சவாலான பிரிவில் இடம் பெற்றுள்ள போதிலும், தெளிவான வியூகங்களுடன் விளையாடி வெற்றி பெற அணி தயாராக உள்ளது.