
வாட்ஸ்அப் தனது இணைய பதிப்பில் டெஸ்க்டாப் செயலி இல்லாமலேயே க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட்டில் ஸ்கிரீன் ஷேரிங், எமோஜி ரியாக்ஷன், கால் டிரான்ஸ்ஃபர் மற்றும் பின்னணி இரைச்சலைக் குறைக்கும் நாய்ஸ் சப்ரெஷன் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அழைப்புகள் அனைத்தும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த அம்சங்கள் வரும் வாரங்களில் உலகளவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.