
திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நூல் கொள்முதலில் போலி பதிப்பகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் எழுதப்பட்ட தரம் குறைந்த நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அகல் விளக்கு போன்ற போலிப் பதிப்பகங்கள் மூலம் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது இந்தியாவிலேயே முதல்முறையாக நடந்துள்ள AI ஊழல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.