
ஆகஸ்ட் இறுதியில் தொடங்கவுள்ள 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஆகஸ்ட் 2 அன்று அறிவித்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரத்திகா ராவல் உள்ளிட்ட ஐந்து பேர் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் செப்டம்பர் 2-வது வாரம் வரை நடைபெறவுள்ள நிலையில், ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா மற்றும் ரேணுகா தாக்கூர் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.