/polimer-news/media/media_files/2026/10/10/11-2026-10-10-17-17-37.jpg)
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட உள் தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி வரை பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.