ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா டீசல் வாங்கும் முடிவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யாவுடன் செய்யப்பட்டுள்ள இந்த டீசல் ஒப்பந்தம் உலக சந்தைக்காகவே என்றும், அதிக விலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.