
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படம் 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில் உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்தில் மதுபாலா மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.