
சீனாவில் நடைபெற்ற சூப்பர் 750 அந்தஸ்து கொண்ட மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜியாங் யு ரென்-ஜி டிங் ஹி ஜோடியை ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் தனது இரண்டாவது பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய ஜோடி, ஏற்கனவே சிங்கப்பூர் ஓபனிலும் கோப்பை வென்றிருந்தது.