
டொரண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா தோல்வியடைந்து வெளியேறினார்.
ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவிடம் மோதிய சபலென்கா, முதல் செட்டை இழந்தாலும் இரண்டாவது செட்டை 6-4 என வென்று போராடினார்.
இறுதி செட்டில் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த சபலென்கா, கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் தொடரிலும் 4-வது சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.