
கோவை மாணவர் அமுதன், திருவொற்றியூர் மாணவர் தனுஷ் மற்றும் காஞ்சிபுரத்தில் இரு இளைஞர்கள் என கடந்த ஒரு வாரத்தில் நடந்த கொலைகளை உதயநிதி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அரசின் அலட்சியம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கே இத்தகைய கொலைகளுக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.