
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட இந்த ரக ராக்கெட்டுகள் 2021-ம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.