
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பல்வேறு விருதுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், தனது மிசா கைது குறித்தும் தியாகம் குறித்தும் தனக்கு சான்றிதழ் அளிக்கவோ மார்க் போடவோ யாருக்கும் தகுதி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தற்போது மின்வெட்டு மற்றும் அரிவாள் வெட்டு ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி நிலவுவதாகவும் அவர் விமர்சித்தார்.