
சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலைய ஒப்பந்தம் பெற்றுத் தந்ததில் லஞ்சம் பெற்றதாக, ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு தலா 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
73 வயதான மொரேனோ உடல் ஊனமுற்றவர் என்பதால், அவர் தனது சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.