
ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
90 பேர் மட்டுமே பயணிக்கும் திறன் கொண்ட அந்தப் படகில் 120 பேர் வரை பயணம் செய்ததே விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா எல்லைப் பகுதிகளில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.