/nakkheeran/media/media_files/2026/10/22/ns-2026-10-22-14-52-43.jpg)
சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து சுரேஷ் மற்றும் சுதீப் போகதி ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பிய சம்பவத்தை அடுத்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 6 சிறை காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தப்பியோடியவர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொருவரான சுரேஷ் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.