
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனான வீரர் பரிமாற்றத்தின் மூலம் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்புகிறார்.
இதற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.
நடராஜன் திருத்தப்பட்ட தொகையான ரூ.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இணைகிறார், அதேவேளையில் ஜீஷன் அன்சாரி ரூ.40 லட்சம் தொகையில் டெல்லி அணிக்கு செல்கிறார்.