
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க பாகற்காய் சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பாகற்காயில் உள்ள சாரண்டின் மற்றும் பாலிபெப்டைட் பி ஆகிய வேதிப்பொருட்கள் இன்சுலின் போல செயல்பட்டு, உடலில் குளுக்கோஸ் பயன்பாட்டைச் சீராக்க உதவுகின்றன.
தினமும் பாகற்காய் ஜூஸ் அல்லது கறி தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வது, உடலை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்ற உதவும்.