
இந்திய ஜவுளி சந்தையின் தற்போதைய மதிப்பீடான ரூ.17.20 லட்சம் கோடியை, 2030-ம் ஆண்டுக்குள் ரூ.33.50 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க 'கபாஸ் கிராந்தி' திட்டத்தின் கீழ் ரூ.5,659 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை கமிஷனர் சவுரப் குல்கர்னி தெரிவித்தார்.
சர்வதேச பருத்தி உற்பத்தியில் இந்தியா 19 சதவீத பங்களிப்பை வழங்குகிறது, மேலும் சுமார் 60 லட்சம் விவசாயிகள் இந்த பருத்தி உற்பத்தியை நம்பியுள்ளனர்.