
பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் விமான நிலையங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குவது அவசியமாகும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
பொதுச் சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு தனியார்க் குழுமத்தின் கைக்குச் செல்லும்போது அவை எளிய மக்களுக்கு விலை உயர்ந்ததாகவும் எட்டாக்கனியாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது என்றார்.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுப் பயன்பாட்டு இடங்கள் தனியார்மயமாவதைத் தவிர்த்து அரசின் பொறுப்பிலேயே வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.