
விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது திரைப்படமான 'சிட்டி ஆஃப் கோல்டு' படத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார்.
சித்தார்த் இயக்கும் இப்படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தங்கம் கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.