
சைபர் குற்றவாளிகளுக்கு கமிஷன் ஆசையில் வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட இடைத்தரகர்கள் மற்றும் மோசடி நபர்கள் என 837 பேரை தமிழக சைபர் கிரைம் போலீசார் இரண்டு நாட்களில் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பதிவான 9,804 வழக்குகளில் ₹545 கோடி மோசடி செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்ததில், 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம்கார்டுகள், 114 வங்கி புத்தகங்கள் மற்றும் 73 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கூட்டாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.