
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற பீகாரைச் சேர்ந்த நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் மீது ஓட்டல் ஊழியருக்குப் பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தியதுடன், போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்காமல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
மேலும் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க இந்திய பாராலிம்பிக் குழு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.