
இந்தியாவின் உற்பத்தித் துறை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (பிஎம்ஐ) ஜூன் மாதத்தில் 54.2 ஆக இருந்த நிலையில், ஜூலையில் 53.5 ஆகக் குறைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது.
புதிய ஆர்டர்களின் வேகம் குறைந்த போதிலும், கனடா, எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாகச் சரிவைச் சந்தித்துள்ளதாக எச்எஸ்பிசி இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.