
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய ரொமாண்டிக் ஆக்சன் படத்திற்கு 'ஜாக்கி' என பெயரிடப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.