
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் கமிஷன் தடையை மீறி 8 வயது சிறுவனை வேனில் ஏற்றி உதயநிதி பேச வைத்துள்ளார்.
வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதுடன், தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் சிறுவனைப் பேச வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை ஆய்வு செய்த பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.