
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
பளுதூக்குதலில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சமும், ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி வென்ற பிரவீன் சித்திரவேலுக்கு ரூ. 30 லட்சமும் வழங்கப்பட்டது.
அதே ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.