
சென்னை குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான ‘துளி’ இலச்சினையை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார்.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தை தொடங்கி வைத்து குறும்படத்தையும் அவர் பார்வையிட்டார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வணிக கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படும்.