
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அப்பாச்சி ரக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்தின்போது ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில் பல ஏக்கர் பரப்பளவில் புல்வெளி கருகியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.