
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மருமணியின் விக்கெட்டை வீழ்த்தி அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.