
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோ கோ காஃப் மற்றும் ஜெசிகா பெகுலா மோதுகின்றனர்.
அரை இறுதியில் கோ கோ காஃப் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும், ஜெசிகா பெகுலா 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் மோதுவது 1970-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 56 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.