சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் வாய்மொழி விளக்கக்காட்சிகள் மற்றும் வகுப்பறையில் எழுதும் தேர்வு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வகுப்பறை விளக்கக்காட்சிகள் அவர்களின் இறுதி மதிப்பெண்களில் 30 விழுக்காட்டைத் தீர்மானிக்கின்றன.
ஏஐ பயன்பாட்டைக் கண்டறியும் மென்பொருள்கள் துல்லியமற்ற முடிவுகளைத் தருவதால், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனைச் சோதிக்கும் புதிய மதிப்பீட்டு முறைகளுக்குப் பல்கலைக்கழகங்கள் மாறியுள்ளன.