நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தின்போது மாணவர் தாக்குதல் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
NALSAR பல்கலைக்கழக மாணவர்கள் தலைமை நீதிபதியிடம் பட்டம் பெற மறுத்த நிலையில், அவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக்கூடாது என பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து, தனது கடிதத்தைத் திரும்பப் பெற்ற மனன் குமார் மிஸ்ரா, மாணவர்களின் மனதைப் புண்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கோரினார்.