
திருவள்ளூர் பள்ளி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து தொடக்கக்கல்வித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சமைத்த உணவை மாணவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்பு, அது தரமானதா என்பதை ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்டு உறுதி செய்த பின்னரே வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சமையலறையைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் இதனைக் கண்காணிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.