
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் தான் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகை அறையை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் நள்ளிரவில் வற்புறுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இரவு 9.47 மணிக்கு கூடுதல் ஆட்சியரிடமிருந்து வந்த அழைப்பில் அறையை காலி செய்ய உத்தரவு வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
சம்பவத்தின் போது சர்க்யூட் ஹவுஸுக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.