
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் எந்தவொரு வழக்கிலும் தமது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து இயங்கி வந்த நிலையில், அதன் பதிவை ரத்து செய்யக்கோரிய விண்ணப்பத்தை ஆர்பிஐ நிராகரித்துள்ளது.
இதன் காரணமாக டாடா சன்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆர்பிஐ தனது தரப்பு கருத்தை நீதிமன்றம் கேட்பதை உறுதி செய்ய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.