இந்தியாவில் இணைத்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோ நிறுவனம், பயனர்களை 2G-லிருந்து 4G-க்கு மாற்றும் வகையில் சிறப்பு ஜியோ ஆண்டு விழா சலுகையை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையின் கீழ் தகுதியுள்ள ஜியோ பாரத் 4G போன்கள் ₹1,499 விலையில் வழங்கப்படுவதோடு, மாதத்திற்கு 14GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் கிடைக்கும்.
வழக்கமான 2G பயனர்கள் 6 மாதங்களுக்குச் செய்யும் குறைந்தபட்ச செலவை விட கூடுதல் தொகையான வெறும் ₹299 செலவில் இந்த மேம்பட்ட 4G டிஜிட்டல் போனை பெறலாம்.