
காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தரைவழி நடவடிக்கையில், ஹமாஸ் அமைப்பின் உள் பாதுகாப்பு பிரிவு தலைவரான முயின் அல்-அராபித் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை காசா நகரில் நடந்த 12 தாக்குதல்களில் அரபித்தின் மனைவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் மற்றும் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளன.
கைது செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் மேலதிக விசாரணைக்காக இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வடக்கு காசாவில் ஹமாஸின் கட்டுப்பாட்டை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.