
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் துணி வியாபாரி குட்டிமாரி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் முருகன், கொழுந்தன் ரவி மற்றும் மாமியார் சிவகாமி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழுந்தன் ரவிக்கும் அண்ணி குட்டிமாரிக்கும் இடையே இருந்த பழக்கத்தைக் கைவிடுமாறு கூறியபோது ஏற்பட்ட தகராறில், ரவி துண்டால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
கொலையை மறைப்பதற்காக மூன்று பேரும் சேர்ந்து உடலைச் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்திற்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.