
ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளியும் வென்றுள்ள அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
அவரது தொடர் வெற்றி இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.