ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அபின் பயிரிட தடை விதித்திருந்தாலும், விவசாயிகள் தடையை மீறி பயிரிடுவதால் உற்பத்தி 5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
அபின் பயிரிடப்படும் நிலப்பரப்பு 10,000 ஹெக்டேரில் இருந்து 43,000 ஹெக்டேருக்கு மேல் உயர்ந்துள்ளதுடன், உற்பத்தி 300 டன்களில் இருந்து 1,500 டன்களாக அதிகரித்துள்ளது.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல்களே இந்த வளர்ச்சிக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ள ஐநா, சர்வதேச ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க வலியுறுத்தியுள்ளது.