
சித்தா பட இயக்குனர் சு. அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசன் கையில் அரிவாளுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் இந்த புகைப்படம், இப்படம் ஒரு ஆக்ஷன் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம், இந்தியன் 2 படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.