
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் உயிரிழந்த விவகாரத்தில், தங்கள் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் இல்லை என முதல்வர் ஜெயா மறுப்பு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் அமுதன் ஜூலை 24-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 11-ம் தேதி மீண்டும் வர அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் விடுதியில் தங்கியிருக்கவில்லை என நிர்வாகம் கூறியுள்ளது.