
சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாமானிய மக்களின் முகங்களை வாடகைக்கு விடும் 'டிஜிட்டல் லைக்னஸ் லைசென்சிங்' என்ற புதிய வர்த்தகப் புரட்சி ட்ரெண்டிங்கில் உள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியான குறுநாடகங்களில் 95% நாடகங்களில் ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத் தயாரிப்புச் செலவு 80% வரை குறைந்துள்ளது.
முகத்தின் பிரபலம் மற்றும் ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப எபிசோட் ஒன்றுக்கு 1200 ரூபாய் முதல் உலகளாவிய விளம்பரங்களுக்கு 12.5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக ஈட்டப்படுகிறது.