
தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் வாயிலாக ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து மூன்றாம் கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
சென்னையில் நேற்று தொடங்கிய இந்த விற்பனை, இன்று முதல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.