
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட 'தாரகை' திரைப்படத்தில் கவுரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
கிரிஷ் இயக்கும் இப்படத்தில் காளி வெங்கட் மற்றும் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சித்து குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.