
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையைப்பூர்த்தி செய்ய, சிரியாவின் பானியாஸ் துறைமுகம் வழியாக ஈராக் பெட்ரோல் இறக்குமதியைத் தொடங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மூன்று மாத ஒப்பந்தத்தின்படி, தினமும் 200 டேங்கர் லாரிகள் மூலம் சிரியா வழியாக ஈராக்கிற்குப் பெட்ரோல் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதல் நடவடிக்கையாக, பிற நாடுகளின் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து சிரியாவிற்கு குழாய் வழித்தடங்களை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக சிரியன் பெட்ரோலியம் கம்பெனி தெரிவித்துள்ளது.