
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாதது அரசின் நிர்வாகத் தோல்வி என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரசிகர் மனநிலையில் இருந்து வெளியேறி, துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.